நமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை

நமோ செயலி மூலம் தங்கள் ஆட்சியின் மதீப்பிட்டை தெரிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக நமோ என்ற பெயரில் செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி அவ்வப்போது நேரலையில் பேசி வருகிறார்.

இதனிடையே இந்த செயலி மூலம் தங்கள் நான்கு ஆண்டு கால ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் மதிப்பீடுகளையும் தெரிவிக்குமாறும் மோடி கோரியுள்ளார்.