வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரசின் தாக்கம் கேரளாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கோழிக்கோட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரசால் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நிபா வைரஸ் அறிகுறி உள்ள சுமார் 200 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் அதிகம் உள்ள 26 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலம் பரவும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.