தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனது சிகிச்சைக்காக, இன்று அமெரிக்கா செல்கிறார்.
ஏற்கனவே, சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மீண்டும் அவர், அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. இம்முறை அவர், அங்கு, 20 நாட்கள் தங்கி, சிகிச்சை பெற உள்ளார். விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதா மட்டுமின்றி, தே.மு.தி.க., நிர்வாகி ஒருவரும் செல்லவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.