துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி சூடு பற்றி சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துணை வாட்டாட்சியார்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தனி துணை வாட்டாட்சியார் சேகர், சிப்காட் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு உத்தரவிட்டதன் பேரில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.திரேஸ்புரத்தில் மண்டல துணை வாட்டாட்சியார் கண்ணன் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. துணை வாட்டாட்சியார் கண்ணன் ஆய்வாளர் பார்த்திபனுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-யில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories