மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே மைதான அதிகாரி தரங்கா இண்டிகா, கிரிக்கெட் வீரர் மெண்டிஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய துணை தலைவர் மோகன் டி சில்வா, மைதானத்தின் தன்மை குறித்து அணியின் கேப்டன்களோ, நடுவர்களோ புகார் எதுவும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா புகாரானது தங்கள் நாட்டுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ள அவர், நம்புவதற்கு கடினமானதாக இருந்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.