தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கவர்னர் பன்வாரிலால் ஆறுதல் கூறினார்.
முன்னதாக பன்வாரிலால் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். பலத்த காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை, விமானத்தில் துாத்துக்குடி சென்றார். விமான நிலையத்தில் கவர்னரை, கலெக்டர், எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.