கோவை மாநிலத்தில், ஆறு அரசு கல்லுாரிகள், மூன்று அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,465 இடங்கள் பகுதி நேர, பி.இ., — – பி.டெக்., படிப்புகளுக்கு உள்ளன. இதற்கான கலந்தாய்வு, கோவை, சி.ஐ.டி., கல்லுாரியில், வரும் ஜூன் 2 முதல் துவங்க உள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, 1,200 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இதில், தகுதியுடைய, 650 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கூறியதாவது: குறிப்பிட்ட காலத்தில், 1,200 பேர் விண்ணப்பித்தனர். இதில், கல்வி தகுதி, பணி அனுபவம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 550 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.மீதமுள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்று இணையதளத்தில், https://www.ptbe-tnea.com/ வெளியிட உள்ளோம்.தரவரிசை பட்டியலின் படி, பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்புக் கடித நகல், கட்டணத்திற்கான வங்கி, டி.டி., ஆகியவற்றுடன், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0422 — 2574071, 0422 — 2574072 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.