Homeசற்றுமுன்அரசு பள்ளிகளில் விரைவில் LKG, UKG வகுப்புகள் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் விரைவில் LKG, UKG வகுப்புகள் – செங்கோட்டையன்

05 May30 senkottiyan - Dhinasari Tamilஅரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில், ஆங்கில வழியிலான, LKG மற்றும் UKG வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றும் செம்மலை கூறினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரோடு ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களோடு இணைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டமும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,969FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...