தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதியோடு தேர்வுகள் முடிந்தது. இதனையடுதது ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப் பின் நாளை [ஜூன்] 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை, இதனால் பெற்றோர்கள் நாளையே பள்ளி திறக்காமல் ஜூன் 7ந்தேதி திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வரை தமிழக கல்வித்துறை நாளை பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்திருக்கிறது