தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துகொள்ள வேண்டி கேட்டு கொண்டதால், இன்றுமுதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துகொள்ள வேண்டி கேட்டு கொண்டதால், இன்றுமுதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.
மேலும் இவர் ஏற்கனவே வகித்து வந்த தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் பொறுப்பில் தொடர்ந்த பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார். என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.