தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆணையத்தில் தகவல் தரலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து அறிய அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் மக்கள் தகவல் தரலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்களை ஜூன் 22க்குள் நேரிலோ, தபாலிலோ ஆணையத்தில் தெரிவிக்கலாம்; மற்றும் காவல்துறை அத்துமீறி ஏதும் நடந்ததா என்பது பற்றியும் விசாரணை ஆணையத்தில் மக்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.