
பாகிஸ்தான் அணியுடன் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்திருந்தது. அலஸ்டர் குக் 46 ரன், ஜென்னிங்ஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். 2ம் நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 45 ரன் எடுத்து ஆமிர் வேகத்தில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். அந்த அணி 43.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது.