கமல் சினிமாவை போன்று அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது அரசின் கொள்கை முடிவுதான் என்றும் நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதில் அரசு இன்னும் உறுதியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.