சட்டமன்றத்தில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், வரும் 2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணைய் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்ப்டுவ்தாவும், பிளாஸ்டிக் பொருள் தடைக்கு மக்களும், வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழையிலை , தாமரையிலை பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் எதிர்கால சந்ததியனருக்கு பிளாஸ்டிக் இல்லாத சமுதாயத்தை பரிசளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மருத்துவ பொருட்களுக்கும் , பிளாஸ்டிக் தடையிலிருந்து விலக்கு என்றும் அவர் கூறினார்.