தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கியதை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்தது. இதை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததற்கும், போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களை குறிவைத்து சுட்டதும் திட்டமிட்ட சதி என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஒருநபர் விசாரணை ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு சட்டசபை வளாகத்தில் கைது செய்யபட்டுள்ளார்.