கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் விஸ்வரூபம் – 2 படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படத்துக்கான வேலைகள் பாதியில் நின்றன. விஸ்வரூபம் -2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடிகர் கமல் சமீபத்தில் தொடங்கி முடித்தார். சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமலுடன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வந்தன.