மக்காச்சோளத்துக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஜெ.கதிரவன் வெளியிட்ட அறிக்கையில்,
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மக்காச்சோளத்துக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. விதை நேர்த்தி செய்தல், உரமிடுதல், நீர் நிர்வாகம், நோய், பூச்சி நிர்வாகம் குறித்து காணொலிக் காட்சி, செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரிலோ அல்லது உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு.புனிதாவதியை 89390-03569 என்ற செல்பேசியில் தொடர்புகொண்டு பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.