​’விஸ்வரூபம் 2′ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை ட்வீட் செய்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

கமல் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. அப்போதே விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் துவங்கியிருந்த நிலையில், அடுத்த வருடமே இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அடுத்தடுத்த படங்கள் மற்றும் அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்த வேளைகளில் பிஸியாகியிருந்த கமல் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து முடித்துள்ள நிலையில்,
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அப்போது படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை குறிப்பிட்டு விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் என ட்வீட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதனை க்ளிக் செய்து பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் அந்த லிங்கில் வீடியோ இல்லையென ரசிகர்கள் கமெண்ட் செய்ததையடுத்து ஸ்ருதிஹாசன் அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு மறுபடி சரியான லிங்கை  ட்வீட் செய்தார்.