அமெரிக்கா – வட கொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

அமெரிக்கா – வட கொரியா பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர்.

சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது டிரம்ப் கூறுகையில், கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தை அனைவரும் எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக இருந்தது. இனி புதிய சூழலில் இரு நாட்டு உறவு தொடரும். இதனால், அமெரிக்கா, வட கொரிய மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். வட கொரிய அதிபர் கிம்மை நிச்சயம், வெள்ளை மாளிகை வருமாறு அழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

வட கொரிய அதிபர் உன் கூறுகையில், கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு, உறவை முன்னெடுத்து செல்ல உள்ளோம். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நிகழ்ந்துள்ளது. உலகம் பெரிய மாற்றத்தை பார்க்கும் என்றார்.

தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் பல முக்கிய ஒபப்ந்தத்தில் கையெழுத்து போட்டனர். ஒப்பந்தம் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும்

முன்னதாக சந்திப்பு தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.