ஜியோவுடன் போட்டி போடுகிறது ஏர்டெல்லின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம். இதன் பலன்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா?
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, ஏர்டெல் நிறுவனம் ரூ. 149 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது ஆச்சரியப் படுத்தியுள்ளது.
ஜியோ – எர்டெல் நிறுவனங்களுக்கு இடையேயான கடும் போட்டியில், இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரீசார்ஜ் திட்டங்களிலும் புதிய மாற்றங்கள் அறிக்கப் பட்டுள்ளன. தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 149 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா , வரம்பற்ற வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவில்லை.
ஏர்டெல்லின் இந்த திட்டம் நேரடியாக ஜியோவின் ரூ 149 ரீசார்ஜ் திட்டத்துடன் போட்டி போட்டுக் கொண்டுள்ளது. ஜியோவின் ரூ. 149 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு நேரடியாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 149 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதேபோல் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்திலும் ஏர்டெல் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2.4ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.