Homeசற்றுமுன்தொடங்கியது 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R முன்பதிவு; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

தொடங்கியது 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R முன்பதிவு; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஜப்பானிய மோட்டர் சைக்கிள் நிறுவனமான, காவசாகி நிறுவனம் தனது புதிய மாடலான 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R சூப்பர்பைக்குகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. 3 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த பைக்கை கவாசாகி டீலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் தேதியை இன்னும் இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் ஜூலை மாதத்தின் 15ம் தேதி வாக்கில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உலகளவில் சூப்பர் பைக்குகளை விரும்புவர் களிடையே 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R ஏற்கனவே பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

bike - Dhinasari TamilZX-10R பைக்குகள் முன்பு முழுவதும் கட்டமைக்கப்பட்ட ஒரு வாகனமாகவே (Completely-Built Unit) விற்பனை செய்யப் பட்டது. ஆனால் 2018 மாடல்கள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பார்ட்ஸ்களுடன் புனேவில் உள்ள சாகன் ஆலையில் தயாரிக்கப் பட்டுள்ளது.  புதிய 10R பைக்குள் முற்றிலும் நாக்-டவுன் (Completely Knocked-Down) செய்யப்பட்ட தயாரிப்பாகும். முற்றிலும் நாக்-டவுன் செய்யப்பட்டுள்ளதால், இந்த பைக்கின் விலை குறைவதோடு, வரையறுக்கப்பட்ட விலையில் கிடைக்கும். இந்த பைக் டெல்லியில் ஷோரூம்க்கு முந்தைய விலை 18 லட்ச ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bike1 - Dhinasari Tamil

998cc லிக்யுட் கூள் இன்லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் மூலம் இயங்கும் நிஞ்ஜா ZX-10R, 194bhp மற்றும் 114Nm சுழச்சி திறன் கொண்டது. மேலும், 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இன்ஜினுடன் இணைக்கப் பட்டுள்ளது.

120/70 ZR17 மற்றும் 190/55 ZR17 ஆகியவற்றின் முன்புற மற்றும் பின்புற டயர்கள் முறையே அலுமினியம் சுற்றளவு பிரேம்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜிபி மாடல்களில் பயன்படுத்தப்படும் முறை போன்று இந்த பைக்கில் சோவா 43mm பேலன்ஸ் ப்ரீ போர்க் சஸ்பென்சன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன்புற பிரேக்குகள், 330mm பிரம்போ செமி-ப்ளாட்டிங் டிஸ்க் ஜோடிகள் மூலமும், பின்புற பிரேக் 220mm டிஸ்க்கை அமைப்பு கொண்டுள்ளது. இந்த பிரேக்கிங் முறை கவாசுகி இன்டலிஜின்ட் ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

bike3 - Dhinasari Tamilஇதுமட்டுமின்றி, ஸ்போர்ட் கவாசுகி திர்க்ஷ்ன் கண்ட்ரோல், கவாசுகி லான்ச் கண்ட்ரோல் மாடல், கவாசுகி இன்ஜின் பிரேக்கிங் கன்ரோல், கவாசுகி குயிக் ஷிப்ட்டர் மேற்புறத்தில் மட்டும், கவாசுகி கார்னர் மேனேஜ்மெண்ட் பங்ஷன், போஸ்க் இன்டர்டைல் மெசர்மென்ட் யூனிட் போன்ற எலக்ட்ரானிக் வசதிகளையும் இந்த பைக் கொண்டுள்ளது.

இந்த பைக்கில், 100 சதவிகிதம் வேகத்தை கொடுக்கும் முழு வேகம், 80 சதவிகிதம் வேகத்தை கொடுக்கும் நடுத்தர வேகம் அல்லது 60 சதவிகிதம் வேகத்தை கொடுக்கும் குறைந்த வேகம் போன்றவைகளை தேவைக்கேற்ப செலக்ட் செய்யும் வசதியும் உள்ளது.

உலக மார்க்கெட்டில் இந்த பைக் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ZX-10R ABS ஸ்டேயின் சில்வர், ZX-10R SE பிளாக் மற்றும் ZX-10R KRT மாடல் கிரீன் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,546FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

Ak62: ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

Latest News : Read Now...