ஈரானில் நடக்க உள்ள ஆசிய குழு செஸ் சாமபியன் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்களை சவுமியா சாமிநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஈரானில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் உள்நாடு மட்டுமின்றி மற்ற நாட்டை சேர்ந்த வீராங்கனைகளும் தலையை மூடும் வகையிலான துணி அணிந்து விளையாட வேண்டும் என்று விதி உள்ளது.
இந்நிலையில் இந்த விதிமுறை தனிநபர் உரிமையை மீறுவதாக உள்ளது என்று கூறியுள்ள பெண்கள் கிராண்ட்மாஸ்டர் மற்றும் உலக ஜூனியர் பெண்கள் செஸ் உலக சாம்பியனுமான சவுமியா சாமிநாதன், ஈரானில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்க உள்ள ஆசிய குழு செஸ் சாமபியன் போட்டியில் பங்கேற்க மறுத்துள்ளார்.
இதே காரணத்திற்காக கடந்த 2016ல் ஈரானில் நடந்த ஆசிய ஏர்கன் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை ஹீனா சிந்து பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.