மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர் தெரியவில்லை என்ற போதும், கட்டிடத்தின் 25வது மாடியில் தீ பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க விரைந்துள்ளன. இன்னும் அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அடையவில்லை என்று தெரிய வந்துள்ளது.

தீ விபத்து குறித்த போட்டோகள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.