ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்த நிலையில் அந்த அணி முதல் முறையாக இந்தியா அணியுடன் மோத உள்ளது.
கேப்டன் விராட்கோலி இங்கிலாந்து தொடருக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியில் துவக்க வீரர்களாக தவானும், முரளி விஜய்யும் விளையாட உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.