வரலாற்றில் முதல் முறையாக 3 நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டி

2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன 2018-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நாளை தொடங்குகின்றன.

2022-ஆம் ஆண்டு போட்டிகள் கத்தாரில் நடைபெறுகின்றன. இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை ஃபிபா மாஸ்கோவில் நடத்தியது.

இதில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்தும் மொராக்கோ தனித்தும் போட்டியிட்டன. இந்த வாக்கெடுப்பில் 134 வாக்குகள் பெற்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 80 போட்டிகளில் 60 போட்டிகள் அமெரிக்காவிலும் எஞ்சிய தலா 10 போட்டிகள் கனடா மற்றும் மெக்சிகோவிலும் நடைபெறுகின்றன. மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நடத்துவது வரலாற்றில் முதன் முறையாகும்