முத்தரப்பு டி20 தொடர்: 3வதுலீக் போட்டியில், ஸ்காட்லாந்து – அயர்லாந்து அணிகள் வரும் 16ம் தேதி மோதல்

முத்தரப்பு டி20 தொடரில் வரும் 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இதில் நெதர்லாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.