ஸ்டுட்கார்ட் ஓபன் காலிறுதி முன்னேறினார் ரோஜர் பெடரர்

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் ஓபன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.