இந்தியா- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இன்றைய முதல் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்து, விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சதம் அடித்த தவான், உணவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.