நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

நாளை டெல்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு ஆணையத்தை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு பிரதமர் மோடியை சந்தித்து நேரில் நன்றி சொல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மேலும் நாளைநடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய செயல் திட்டங்களை செயல் படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.