வெங்கய்ய நாயுடு இன்று சிக்கிம் பயணம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரண்டு நாள் பயணமாக, இன்று சிக்கிம் மாநிலத்துக்குச் செல்கிறார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள ஐசிஎஃப்ஏஐ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, பாக்யாங்கில் உள்ள தேசிய மல்லிகை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அந்த மையத்தின் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.