இந்திலாந்து சூப்பர் லீக்கில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா, இங்கிலாந்தில் நடைபெறும் கிய சூப்பர் லீக் போட்டியில் விளையாட உள்ளார். இதன் மூலம் இந்த போட்டியில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் என்ற அணிக்காக விளையாட ஸ்மிரிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

21 வயதான ஸ்மிரிதி, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறது. இதுவரை 826 ரன்கள் எடுத்துள்ளார். T-20 போட்டிகளில் அதிகபட்சமாக 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்துள்ளார்.