சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கிய இயக்கிய ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்சார் சான்றிதழ் ஆகிய பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஃப் வேடத்தில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வைபவி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.