சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனபாலன் காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனபாலன் காலமானார்.  கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வி.தனபாலன் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த மாதம் 31ம்  தேதி அவர் ஓய்வு பெற்றார்.
ஐகோர்ட் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 17  நீதிபதிகள் பதவி ஏற்ற சம்பவம் கடந்த 2005ம் ஆண்டு நடந்தது. அப்போது நீதிபதியாக பதவி ஏற்ற நீதிபதி வி.தனபாலன், இதுவரை 40 ஆயிரம் வழக்குகளை  விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இவர் பல வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். அதில், போஸ் மற்றும் தமிழக அரசு தொடர்பான  வழக்கில் அரசியல் சட்டத்தின் முக்கிய தீர்ப்பை பிறப்பித்துள்ளார். நேற்றுகூட 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலம் ஆர்ஜிதம் தொடர்பான  வழக்குகளை விசாரித்து சிறப்பு மிக்க தீர்ப்பினை பிறப்பித்துள்ளார். இவர் எழுதிய ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை  கட்டமைப்பு – ஒரு பார்வை’  புத்தகம் வெளியீட்டு விழா கடந்த மாதம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது