தமிழகம், புதுச்சேரியில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் மாலை, இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது.