சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானத்தில் தீ

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளை உருகுவே அணிக்கு நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க ரோச்சியா ஏர்பஸ் மூலம் செயின்ட்பர்க் முதல் ரோச்டோவ் பயணமான சவூதி அரேபியா கால்பந்து வீரர்களின் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனவைரும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து பேசிய விமான நிறுவன செய்தி தொடர்பாளர், விமானத்தின் ஒரு இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.