சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.

நடராஜர் கோயிலில் ஆனித் திருஞ்சன விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

நாளை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்ஸவம் முடிவடைகிறது.