மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!

மதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை! இதனை அமைச்சர் உதயகுமார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்  அளித்துள்ளதாக, அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் எனக்கு அனுப்பிய மெசேஜில்,  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இதை அடுத்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவுள்ளது எனத் தெரியவந்துள்ளது.