காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஆளுநர் வோராவின் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாரதீய ஜனதா கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிடிபி கட்சி பாரதீய ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது. அதில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி பாரதீய ஜனதா கட்சி ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் பிடிபிக்கு பாரதீய ஜனதா கட்சி ஆதரவு அளித்து வந்ததை திரும்ப பெற்றுக் கொண்டது. இதையடுத்து ஆட்சி கவிழும் என்பதால் மெஹபூபா முப்தியே ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் வோரா கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது