துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த தோனியின் மனைவி

அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார்.

0.32 ரிவால்வர் பிஸ்டல் கேட்டு விண்ணப்பித்துள்ள அவரது விண்ணப்பத்தில், பெரும்பாலான நாட்கள் தான் வீட்டில் தனியாக இருப்பதால், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள தாமதமின்றி உரிமம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.