சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தேதி தொடங்குகிறது.சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் முடிந்தது.

தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 21, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று, நாளை மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இன்று தொழில் பாடப் பிரிவு, பி.ஏ. தமிழ் படிப்புக்கு தமிழில் 125 முதல் 150 வரை மதிப்பெண் பெற்றவர்களும், பி.ஏ. ஆங்கில இலக்கியப் பிரிவில் ஆங்கிலத்தில் 100-125 வரை மதிப்பெண் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

நாளை அறிவியல் பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியமைப்பியல், புவியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர அறிவியல் பாடப் பிரிவில் 350 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள் சேரலாம். ஜூன் 25 இல் கலைப் பிரிவில் வணிகவியல், வணிக நிர்வாகவியல், கூட்டுறவு, வரலாறு, பொருளியல், அரசியல் சார் அறிவியல், பொது நிர்வாகவியல் பாடப் பிரிவுகளில் சேர 350 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.