ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நேற்று மாலை ராவண சம்ஹாரம் நடைபெற்றது. இன்று விபீஷணர் பட்டாபிஷேகம் மற்றும் நாளை ராமலிங்க பிரதிஷ்டை விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இன்று விபீஷணர் பட்டாபிஷேகத்தினை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் சுவாமி ஆலயத்துக்கு ஸ்ரீராமர் புறப்பாடாகிறார். அங்கு மாலை 3 மணி முதல் 4 மணி அளவில் விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து, அன்றைய தினம் ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். காலை 5 மணியளவில் முதல்கால பூஜைகள் நடைபெற்று காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும். இதன் பின்பு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.