To Read it in other Indian languages…

Home சற்றுமுன் சர்வதேச யோகா தினம்- 16 சிறைகளில் கைதிகளுக்கு யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கும் ஈஷா

சர்வதேச யோகா தினம்- 16 சிறைகளில் கைதிகளுக்கு யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கும் ஈஷா

18 June20 isha yoga - Dhinasari Tamilஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இன்று ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.