நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விவகாரம் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 43 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி மற்றும் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்டவை தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, சரோஜா ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்திலேயே முதல் முறையாக தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் குட்கா மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.