தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் ருச்சிகா ஜெயின், பேகும்பேட் பெண்கள் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் அக்ஷய் கதிரியாவுக்கு எதிரான தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
ருச்சிகா ஜெயின் ஸ்கேட்டிங் போட்டிகளில் தங்க பதக்கம் வென்று உள்ளார் மற்றும் பல தேசிய போட்டிகளில் பட்டம் வென்று உள்ளார். அவர் தனது புகாரில் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை தொந்தரவு செய்து அச்சுறுத்தி வருவதாக கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி திருமணத்திற்குப் பின் தொந்தரவு தொடங்கியது என்றும் அவரது கணவர் தேனிலவுக்கு அழைத்து செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.