சாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2 விற்பனை இன்று துவக்கம்

கடந்த ஆண்டு கிரோம்புக் பிளஸ் சிறப்பான விற்பனையைப் பெற்றதை தொடர்ந்து, அதன் தென் கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மூலம் கிரோம்புக் பிளஸ் வி2-வின் வெளியீடு குறித்து அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் அறிவித்துள்ளது. இந்த 2 இன் 1 கன்வெர்டபிள் சாதனத்தை இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எல்லா முன்னணி விற்பனையகங்கள் மற்றும் இணையதளங்களில், $499.99 (ஏறக்குறைய ரூ.34 ஆயிரம்) என்ற துவக்க விலையில் கிடைக்கப் பெற உள்ளது.

இந்த லேப்டாப்பில், கிரோம் ஓஎஸ், உள்கட்டமைப்பு கொண்ட பேன் மற்றும் கவர்ச்சியான மற்றும் மெலிந்த வடிவமைப்பு சுயவிவரம் ஆகியவை இதில் உள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். மாற்றத்தை செய்ய பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும், அலுமினியம் அலாய், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக உள்ளன.

சாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2 சிறப்பம்சங்கள்

சாம்சங் கிரோம்புக் பிளாஸின் இரண்டாம் தலைமுறையான இது, கிரோம் ஓஎஸ்-சில் இயங்குவதோடு, 12.2 இன்ச் முழு ஹெச்டி (1080×1920 பிக்ஸல்) டச்ஸ்கீரின் டிஸ்ப்ளே உடன் கூடிய 300 நிட்ஸ் என்ற ஒரு உன்னதமான ஒளிர்வை அளிக்கிறது. கோர் பகுதியைப் பொறுத்த வரை, கிரோம்புக் பிளஸ் வி2 இல், இன்டெல் சிலிரேன் 3865வை செயலி ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்கட்டமைப்பு சேமிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றுகிறது. இந்த மாற்றக்கூடிய சாதனம், இன்டெல் ஹெச்டி 615 கிராஃபிக்ஸை பெற்றும் கிடைக்கிறது.

இதில் எஃப்/1.9 துளை மற்றும் ஆட்டோஃபோக்கஸ் திறன்களைக் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா சென்ஸர் காணப்படுகிறது. இந்த கிரோம்புக் பிளஸ் வி2-வின் முன்பக்கத்தை பொறுத்த வரை, முன்பக்கத்தை நோக்கிய 1 மெகாபிக்சல் கேமரா அளிக்கப்பட்டு, செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் செய்ய பயன்படுகிறது. இணைப்பை பொறுத்த வரை, இந்த லேப்டாப்பில் இரு யூஎஸ்பி வகை-சி போர்ட்கள், ஒரு யூஎஸ்பி 3.0 போர்ட், ஒரு மைக்ரோ எஸ்டி ரீடர் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜெக் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இதில் 1.5டபிள்யூஎக்ஸ்2 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 39டபிள்யூஹெச் அளவுள்ள பேட்டரியைப் பெற்றுள்ள இந்த கம்ப்யூட்டரின் எடை, 2.93 பவுண்டுகள் அல்லது ஏறக்குறைய 1.33 கிலோ காணப்படுகிறது.

இது குறித்து சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அமெரிக்காவின் மூத்த துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளரான அலென்னா காட்டன் கூறுகையில், “இன்றைய நுகர்வோர்கள் இருக்கும் இடத்திலேயே தங்களின் தகவல் தொடர்பை சுருக்கி கொள்ள விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றனர். இந்த புதிய சாம்சங் கிரோம்புக் பிளஸ், இந்த தேவையை முழுமையாக சந்திக்கிறது. கிரோம் ஓஎஸ்-சை தேர்ந்தெடுப்போருக்கு, இந்த புதிய சாம்சங் கிரோம்புக் பிளஸை தேர்ந்தெடுக்க எண்ணற்ற காரணங்களை நாங்கள் அளிக்கிறோம். ஏனெனில் ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாமல் உள்ளவர்களுக்காகவே சிறப்பான முறையில் இது வடிவமைக்கப்பட்டு, அவர்களின் வேகத்திற்கும் படைப்பாற்றலையும் வளர்க்க பொருத்தமாக இருக்கும் வகையில் உருவாக்கி உள்ளோம்” என்றார்.