தமிழக அரசின் எந்தத் துறையையும் ஆளுநர் இதுவரை விமர்சனம் செய்தது இல்லை என்று ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மக்கள் நலனுக்காக இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஆளுனரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநில அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமையும் ஆளுனருக்கு உள்ளது என்று கூறியுள்ள ஆளுநர் ”அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.