ஸ்ரீ மத் பரசமய கோளரி நாத ஆதீனத்திற்கு உபட்ட இக் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த சனிக்கிழமை (ஜூன் 23) காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜையுடன் தொடங்குகியது காலை 9.30 மணிக்கு நவக்கிரக பூஜை, தனபூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடை பெற்றன. இன்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வேதபாராயணம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா வருகிறார்.