இன்று வெளியாகிறது 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ

சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ரெட்மீ 6 ப்ரோ மற்றும் மி பேட் 4 டாப்ளெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது சியோமி ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.

சியோமி ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2/3/4ஜிபி ரேம் மற்றும் 16/32/64 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி இ என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் அன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.