நைஜீரியா அணி வீழ்த்துமா அர்ஜென்டினா? நெருக்கடியில் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கால்பந்து ரசிகர்களின் கதாநாயகன் லியோனல் மெஸ்ஸி. இந்தாண்டு மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்கு உலக் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியும் என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்

உலககோப்பையில் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிரா, குரோஷியாவுடன் 3க்கு பூஜ்யம் என்று தோல்வி ஆகியவற்றால் மெஸ்ஸியும், அர்ஜென்டினா ரசிகர்களும் துவண்டு போய் உள்ளனர். அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், நாளை நடைபெறவுள்ள நைஜீரியா அணியை வீழ்த்தியாக வேண்டும். இதனால் நெருக்கடி சூழ்நிலையில் மெஸ்ஸி உள்ளார்.