உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு இரண்டு போட்டிகளும், இரவு 11.30 மணிக்கு இரண்டு போட்டிகளும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டிகளில் மெக்சிகோ – சுவீடன் அணிகளும், தென் கொரியா – ஜெர்மனி அணிகளும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சுவிட்சர்லாந்து – கோஸ்டாரிகா அணிகளும், செர்பியா – பிரேசில் அணிகளும் மோத உள்ளன.